Total Pageviews

Friday 11 November 2011

அஞ்சலக சேமிப்பிற்கு வட்டி உயர்கிறதுநவம்பர் 09,2011,00:19

அஞ்சலக சேமிப்பிற்கு வட்டி உயர்கிறதுநவம்பர் 09,2011,00:19






புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் 3.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு,வங்கிகளின் சேமிப்பு கணக்கிற் கான குறைந்தபட்ச வட்டி,3.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீத மாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, அண்மையில் ரிசர்வ் வங்கி, வங்கிகளின் சேமிப்பு கணக்கிற்கான வட்டி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியது. ஒரு லட்ச ரூபாய் வரையிலான சேமிப்பிற்கு, வங்கிகள் விருப்பமான வட்டி விகிதத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சேமிப்பு கணக்கிற்கு, வாடிக்கையாளர்களிடம் பாரபட்சமின்றி வட்டிவழங்கவும் உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து,வங்கிகளின் சேமிப்பு கணக்கில் வாடிக்கையாளர்கள் மேற் கொண்டு வரும் முதலீடு அதிகரித்து வருகிறது. குறைந்த வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு கணக்கில் இருந்து, வங்கிகளின் சேமிப்பு கணக்கிற்கு பணத்தை மாற்றுவது அதிகரித்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், சிறுசேமிப்பு மூலம் 24 ஆயிரத்து 182 கோடி ரூபாய் திரட்ட,மத்திய அர” இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இதுவரை குறிப்பிடத்தக்க அளவிற்கு புதிய முதலீடுகளை அஞ்சலக சேமிப்பு ஈர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, இந்த சேமிப்பு திட்டத்தில் இருந்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீட்டாளர் கள் திரும்பபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில்,சிறு சேமிப்பு திட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய சீர் திருத்தம் குறித்து அமைக்கப்பட்ட குழு, அதன் பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்திற்கு வழங்கியுள்ளது.இந்த பரிந் துரைகளுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விரைவில் புதிய நடைமுறை கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று மத்திய நிதிஅமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

          .இதன்படி, அஞ்சலக சேமிப்பிற்கான வட்டி 3.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. மேலும் 1-5 ஆண்டுகளுக்கான டெபாசிட்டிற்கான வட்டி 6.25 சதவீதத்தில் இருந்து பல நிலைகளாக 8 சதவீதம் வரையி லும் உயர்த்தப்படும். 5 ஆண்டு தொடர் வைப்பு சேமிப்பிற்கான வட்டி7.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப் படு கிறது. தற்போது 6 ஆண்டுகளாக உள்ள தேசிய சேமிப்பு பத்திரத்தின் காலம், 5 ஆண்டாக குறைக்கப்பட உள்ளது. அதே சமயம், 8.4 சதவீத வட்டியில் 10 ஆண்டிற்கான தேசிய சேமிப்பு பத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.அஞ்ச லக பொது சேமநல நிதிக்கான வட்டி 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாக உயர்த்தப்படும். கிசான் விகாஸ் பத்திர திட் டம் கைவிடப்பட உள்ளது.






Source: Dinamalar

No comments:

Post a Comment