Total Pageviews

Saturday 24 September 2011

கொஞ்சம் யோசிங்களேன்

ஏகலைவன் கதை தெரியுமா உங்களுக்கு?
பாண்டவர்களும், கௌரவர்களும் தங்களது குரு(teacherதுரோணாச்சாரியாரிடம் வில்வித்தையை சாஸ்திர முறையாகப் பயின்று வந்தனர். அப்போது அந்த காட்டில் 'இரண்யதனுஸ்' என்ற காட்டு அரசன் இருந்தான். அவனுக்கு ஏகலைவன் என்ற பெயருடைய மகன் இருந்தான்.

ஏகலைவன் வில் வித்தை கற்றுத்தரும் துரோணரின் பெருமையைப் பற்றி கேள்விப்பட்டான். தானும் அவரிடம் விற்பயிற்சி பெற வேண்டும் என்று பெரும் விருப்பம் கொண்டான். தன்னுடைய வாழ்க்கையில் வில் வித்தையைக் கற்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாக (Burning Desire) வைத்துக்கொண்டான்.

எனவே, அவன் தனது தந்தையுடன் துரோணரிடம் வந்து சேர்ந்தான். தனது மகனுக்கு வில்வித்தைகள் கற்றுத் தருமாறு ஏகவலைனின் தந்தை துரோணரிடம் வேண்டி நின்றார்.


ஏகலைவன் வேடன் மகன் என்பதினாலும், கௌரவர்களிடமும், பாண்டவர்களிடமும் கொண்ட பாசத்தாலும், துரோணர் விற்பயிற்சியை(Bow and arrow) ஏகலைவனுக்குக் கற்றுத்தர விரும்பவில்லை. எனவே அவர் ஏகலைவனைப் பார்த்து "வேடன் மகனே, உன்னையும் என சீடனாகக் கருதுகிறேன். எப்போதும் விற்பயிற்சியை செய்து கொண்டேயிரு. அதில் மிக்க பலம் உள்ளவனாவாய். இப்போது திரும்பிச் செல்" என்று நாசூக்காக சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்.

தனது காட்டிற்கு சென்றவுடன் துரோணர் போன்ற மண் பதுமையை செய்தான் ஏகலைவன். அப்பதுமையையே தன் குருவாக கருதி நாள்தோறும் வழிபட்டு வந்தான். அவன் வில்வித்தைகளை கற்க வேண்டும் என்ற தனது தனியா காதலுடன் , தனது திறமை, வேகம், விவேகம் எல்லாமும் செலுத்தி அந்த வில்வித்தையை குருவின் நேரடி பார்வையில்லாமலேயே முழுவதுமாக கற்றுக்கொண்டான்.

ஏன் அர்ச்சுனனைவிட சிறந்த வில்லாளியாக உருவானான் என்கிறபோது, இந்த கலியுகத்தில் இவ்வளவு அடிப்படை வசதிகளும், வாய்ப்புகளும் உடைய நாம் ஏன் வாழ்வில் முன்னேற முடியாது?


வெற்றி ஒன்றும் கானல் நீரல்ல! அது தூரத்திலேயே உள்ளது! நீ அதை நோக்கி, ஓரடி நடந்தால் நிச்சயமாக அதுவும் ஓரடி உன்னை நோக்கி வரும்.

No comments:

Post a Comment