அஞ்சல்துறை
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
By மயிலாடுதுறை
First
Published : 14 February 2014 03:53 AM
IST
7-வது ஊதியக் குழுவை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, மயிலாடுதுறையில் அஞ்சல்துறை ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
தலைமை அஞ்சல் நிலையம் முன்பு
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய அஞ்சல்துறை ஊழியர்கள் சங்கத்தின்
மயிலாடுதுறை கோட்டச் செயலாளர் ஆர். ஜெயக்குமார் தலைமைவகித்தார். அகில இந்திய
அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் கோட்டச் செயலாளர் கே. துரை முன்னிலை வகித்தார்.
7-வது ஊதியக் குழுவை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். 50 சதவீத பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்கிட வேண்டும்.
இடைக்கால நிவாரணம் வழங்கிட
வேண்டும். கிராமப்புற அஞ்சலகங்களில் பணியாற்றும் அஞ்சல்துறை ஊழியர்களை இலாக்க
ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில்
வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கோரிக்கைகளை வலியுறுத்தி
முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் அஞ்சல்துறை ஊழியர்கள் 30-க்கும்
மேற்பட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment